1590
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1590 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1590 MDXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1621 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2343 |
அர்மீனிய நாட்காட்டி | 1039 ԹՎ ՌԼԹ |
சீன நாட்காட்டி | 4286-4287 |
எபிரேய நாட்காட்டி | 5349-5350 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1645-1646 1512-1513 4691-4692 |
இரானிய நாட்காட்டி | 968-969 |
இசுலாமிய நாட்காட்டி | 998 – 999 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 18 (天正18年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1840 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3923 |
ஆண்டு 1590 (MDXC) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு திங்கட்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 14 – பிரான்சின் நான்காம் என்றியின் தலைமையிலான படையினர் கத்தோலிக்க முன்னணிப் படைகளை மீண்டும் தோற்கடித்தனர்.
- மே–ஆகத்து – பிரான்சின் நான்காம் என்றி பாரிசு நகரைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வி அடைந்தான். பின்னர் எசுப்பானியப் படையினரின் உதவியுடன் கைப்பற்றினான்.
- ஆகத்து 18 – வடக்கு கரோலினாவின் ரோனோக் குடியேற்றத்தின் ஆளுநர் ஜோன் வைட் இங்கிலாந்தில் இருந்து திரும்பி வந்த போது அக்குடியேற்றப் பகுதியில் மக்கல் எவரும் காணப்படவில்லை. பின்னர் அக்டோபர் 24 இல் இங்கிலாந்து திரும்பினார்.
- செப்டம்பர் 15 – ஏழாம் அர்பன் 228வது திருத்தந்தையாகப் பதவியேற்றார். 12 நாட்களின் பின்னர் இவர் மலேரியா நோயால் இறந்தார்.
- செப்டம்பர் 15 – ஆத்திரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் வியன்னாவில் பெருமளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
- டிசம்பர் 5 – பதினான்காம் கிரெகோரி 229வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இலங்கையில் போர்த்துக்கீசரின் மல்வானைக் கோட்டை கட்டப்பட்டது.